இலங்கை மண்பானை தேர்: தொண்டி கடற்கரையில் ஒதுங்கியது!
ADDED :3850 days ago
திருவாடானை: பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண்பானை தேர் ஒன்று, தொண்டி அருகே கடற்கரையில் நேற்று ஒதுங்கியது. ராமநாதபுரம் மாவட் டம், தொண்டி அருகே காரங்காடு கடற்கரையில், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மண்பானை மீது, கோபுர கலசம் போன்ற அமைப்பில் சிறிய தேர் வடிவம், கரை ஒதுங்கியது. அதைப் பார்த்த மீனவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். காரங்காடு பகுதிவாசிகள் கடற்கரையில் திரண்டனர். தொண்டி போலீசார், அதை ஆய்வு செய்தனர். அதில், நாகம்மாள் ரதம், பும்புடு தீவு என, எழுதப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டனர். இலங்கை, பும்புடு தீவில் நாகம்மாள் கோவிலுக்கு, நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட மண் பானை ரதம், கடலில் விடப்பட்டிருந்தாக, எதிர்முனையில் பேசியவர் தெரிவித்தார். இந்த தகவலை அடுத்து, கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.