மயிலை கோவில் விழா சிறப்பு ரயில் இயக்கம்!
ADDED :3850 days ago
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவிலின், 63 நாயன்மார்கள் விழாவிற்காக, மேம்பால வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை, வரும் ஏப்., 2ம் தேதி இரவு 10:20 மணிக்கு, சென்னை கடற்கரையில் புறப்பட்டு, 11:01க்கு வேளச்சேரி சென்றடையும் வகையிலும், 11:15 மணிக்கு, வேளச்சேரியில் புறப்பட்டு, இரவு 12:00 மணிக்கு கடற்கரையை வந்தடையும் வகையிலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.