உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசைலநாதர் கோவிலில் கும்பாபிஷேக பூஜை துவக்கம்

சிவசைலநாதர் கோவிலில் கும்பாபிஷேக பூஜை துவக்கம்

புதுச்சேரி: சிவலிங்கபுரம், சிவசைலநாதர் கோவில் கும்பா பிஷேக விழாவையொட்டி, நேற்று கோ பூஜை நடந்தது. அரியாங்குப்பம் அடுத்த சிவலிங்கபுரத்தில் திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, காலை 9.௦5 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ேஹாமம், சவுபாக்கிய ஷோடச மகாலட்சுமி ேஹாமம், கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. இன்று 31ம் தேதியன்று காலையில் சாந்தி ேஹாமம், திசா ேஹாமம், மூர்த்தி ேஹாமங்கள் நடக்கிறது. நாளை 1ம் தேதி காலை 9 மணிக்கு, முதல்கால பூஜை, 2ம் தேதி காலை 8.30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மாலை 5 மணிக்கு, மூன்றாம் கால பூஜை நடக்கிறது. வரும் 3ம் தேதி நான்காம் கால யாக சாலை பூஜை, 9.30 மணிக்கு கும்பாபிஷேகம், 10 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம், காலை 10.15 மணிக்கு தீபாராதன நடக்கிறது. பகல் 2.45 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !