உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

காரிமங்கலம்; காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி, குண்டுகல்லூர் ராம பக்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த, 28ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜை, கணபதி பூஜை, லட்சுமி பூஜை, தீபாராதனை, முதல்கால யாகபூஜை நடந்தது. 29ம் தேதி இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் காலயாகபூஜை, விஷ்ணு சகஸ்ர நாம ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை, 7 மணிக்கு, நான்காம் காலயாகபூஜை, லலிதா சகஸ்ர நாம ஹோமம்,10.15 மணிக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. சென்னை மாங்காடு நரசிம்ம சாஸ்திரி தலைமையில், பட்டர்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினர். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், 48 நாட்களுக்கு, மண்டல பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !