திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா!
ADDED :3845 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புலவனூரில் திரவுபதி அம்மன் கோவில் தி மிதி திருவிழா நடந்தது. கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவ ங்கியது. கடந்த 26ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், 29ம் தேதி கரகத் திருவிழாவும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில் திருத்தேர் விழாவும், மாலை 6:00 மணிக்கு நடந்த தீ மிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீ ராட்டு விழா நடந்தது.