மயிலாப்பூர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் பல்லக்கில் வீதியுலா!
ADDED :3901 days ago
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று காலை, விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர், சண்டேசர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், பல்லக்கில் வீதியுலா வந்தனர். நேற்று இரவு 10:30 மணிக்கு, யானை வாகனங்களில், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில், சுவாமி வீதியுலா நடந்தது. இரவு 11:00 மணிக்கு துவங்கிய வீதியுலா, நேற்று அதிகாலை 3.00 மணியளவில் நிறைவுற்றது.