ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி சுதர்சன யாகம்
ADDED :3843 days ago
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்புதுார் ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில், உலக நன்மை வேண்டி மகா சுதர்சன யாகம் நடந்தது. கோவில் வளாகத்தில் ஸ்ரீராமாநுஜர் கூடத்தின் சார்பில் ஸ்ரீராமநவமி உற்சவ விழா இரண்டு நாட்கள் நடந்தது. விழாவையொட்டி, ஆதிமூர்த்தி பெருமாளுக்கு சிறப்பு பூஜையும், திவ்ய பிரபந்த பஜனையும் நடந்தது.சுதர்சன யாகத்தை காரமடை ரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் நடத்தினர். பின், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி விஷ்ணு பாராயணமும், திருப்பாவை போட்டிகளும், அன்னதானம், பஜனையும் நடந்தன. விழா ஏற்பாடுகளை ராமாநுஜர் கூடத்தின் செயலாளர் நாராயண ராமாநுஜதாசன் செய்திருந்தார்.