பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா!
ADDED :3841 days ago
பொன்னேரி: பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில், கடந்த மார்ச் 24ம் தேதி, பிரம்மோற்சவ விழா துவங்கியது. கொடியேற்றம், அன்ன வாகனம், சூரிய பிரபை, சிம்ம வாகனம், கோபுர தரிசனம், பூத வாகனம் என, தொடர்ந்து பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழாவும்; பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன. காலை 9:00 மணிக்கு, உற்சவ பெருமானுடன் நிலையில் இருந்து புறப்பட்ட பூந்தேர், சன்னிதி தெரு, நீலியப்பாதுரை தெரு, தண்டபாணி தெரு வழியாக சென்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! என, நெஞ்சுருக வேண்டியபடி, தேரின் வடம் பிடித்து இழுத்து, பெருமானை வழிபட்டு சென்றனர்.