உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்சித்தாமூர் ஜெயின் கோவிலில் மகாவீர் ஜெயந்தி தேர்த் திருவிழா!

மேல்சித்தாமூர் ஜெயின் கோவிலில் மகாவீர் ஜெயந்தி தேர்த் திருவிழா!

செஞ்சி: மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். மேல்சி  த்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைமைப்பீடம் உள்ளது. இங்குள்ள பழமையான பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் ஆண்டுதோறும் மகாவீர்   ஜெயந்தி அன்று ரத உற்சவம் நடத்துகின்றனர். இந்த ஆண்டு ரத உற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி நாந்தி மங்கலம் தர்ப்பக் கொடியேற்றத்துடன் துவங்   கியது. இதில் தினமும் பார் சுவநாதருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்தனர். காலை, மாலையில் சாமி வீதி உலா நடந்தது. நேற்று மகாவீரர்   ஜெயந்தியை முன்னிட்டு 1008 பார்சுவநாதர் ரத உற்சவம் நடந்தது. உற்சவர் பார்சுவநாதரை காலை 9 மணிக்கு ரதத்தில் ஏற்றி வடம் பிடித்தனர். ÷  மல்சித்தாமூர் மடாதிபதி லட்சுமி சேன மகா சுவாமிகள், திருமலை தவளகீர்த்தி மகா சுவாமிகள் வடம் பிடிப்பதை துவக்கி வைத்தனர். வல்லம் ஒன்றிய   சேர்மன் அண்ணாதுரை, செஞ்சி முன்னாள் சேர்மன் ரங்கநாதன், ஊராட்சி தலைவர் முருகேசன் மற்றும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஆயி  ரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். விழா ஏற்பாடுகளை பார்சுவநாதர் திகம்பரர் ஜெயின் அறக்கட்டளையினர்   மற்றும் மேல்சித்தாமூர் ஷேத்திர வளர்ச்சிக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !