திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3900 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்பாள் கோயிலில் பங்குனி திருவிழா 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் விழாவான திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று காலை அம்பாளும், சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் திருக் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக பெருமாள் கோயிலில் இருந்து மணமகள் வீட்டார் சார்பில் பழவகைகள், சீர்வரிசை தட்டுகளுடன் பெருமாள் வீதியுலா வந்தார். காலை 11.40 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. விழாவை புஷ்பவனம் , வீரமணி, கண்ணன், செந்தில்,பாபு பட்டர்கள் உள்ளிட்டோர் நடத்தினர். ஏராளமான பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றி கொண்டனர். அன்னதானம் நடந்தது. 9 ம்நாள் திருவிழாவான இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.