திருப்பரங்குன்றத்திற்கு ஊர் கூடி தேர் இழுக்க வாங்க!
ADDED :3900 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழாவில் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் ஏப்.6 பகல் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடக்கிறது.ஏப்.7ல் தேரோட்டம் நடக்கிறது. திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 43 கிராமத்தினர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மலையை சுற்றி பெரிய வைரத்தேர் வலம் வரும். தேர் இழுக்க கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி, முதல் ஸ்தானிக பட்டர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. வீடு, வீடாக வெற்றிலை, பாக்கு, பத்திரிக்கை கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டது.