வைத்தியநாத திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :3842 days ago
காரைக்கால்: காரைக்கால் பிள்ளைத்திருவாசல் வைத்தியநாத திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் நெடுங்காடு சாலையில் உள்ள பிள்ளைத்திருவாசல் பகுதியில் நேற்று தையல்நாயகி அம்பாள் உடனுறை வைத்தியநாத திருக்கோவில் விநாயகர்,பாலமுருகன்,சண்டிகேஸ்வரர்,மன்மதன் நூதன உள்ளிட்ட ஆலயங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 30 ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ÷ ஹாமம்,நவக்கிரஹ ஹோமம்,கிராம சாந்தி உள்ளிட்ட ஹோமத்துடன் துவக்கியது.நேற்று காலை இரண்டாம் கால பூஜை தொடங்கி தீபாதரணை மற்றும் கெடம் புறப்பாடு நடந்தது.பின் காலை 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.