சக்தி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
சேலம் : சேலம், அன்னதானப்பட்டி, சக்தி காளியம்மன், விநாயகர் கோவில்களில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், அன்னதானப்பட்டி, சக்தி காளியம்மன், விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக பூஜை மார்ச், 30ம் தேதி துவங்கி நடந்து வந்தது. நேற்று காலை, இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது.தொடர்ந்து விக்னேஷ்வர் புண்ணியாகவாஹனம், மண்டப அர்ச்சனை, தசதானம், வேதிகா அர்ச்சனை, ஸ்பர்சாஹூதி கும்பங்கள் (கலசம்) பூஜை, யாத்ராதானம், கலசம் புறப்பாடு, விமான கலச அபிஷேகம், மூலவர் அபிஷேகம், மகாபூர்ணாஹூதி, மஹா தீபாராதனை, சக்தி காளியம்மன் அபிஷேகம் ஆகியன நடந்தது.தொடர்ந்து கும்பாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.