உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி 1008 இளநீர் அபிஷேகம்!

மழை வேண்டி 1008 இளநீர் அபிஷேகம்!

நாகர்கோவில் : கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு அருகே குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. துங்சை மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவரான ஐந்து அடி உயர குகநாதீஸ்வரருக்கு 1008 இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த இளநீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !