உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூளாங்குறிச்சியில் கோவில் தேர் திருவிழா!

சூளாங்குறிச்சியில் கோவில் தேர் திருவிழா!

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தேர்திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த மாதம் 24ம் தேதி முதல் தினந்தோறும் உற்சவர் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகாதீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு பக்தர்கள் தேரினை வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !