உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது.

தினமும் சுவாமி வீதியுலாவும், 29ம் தேதி கோபுர தரிசன நிகழ்ச்சியும், 31ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை 10:10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிவன், அம்பாளை தேரில் வைத்து தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியே இழுத்துச் சென்றனர். மெய்கண்டார் கோவிலில் பக்தர்களுக்கு மோர் மற்றும் அன்னதானமும், மக்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெங்கடகிருஷ்ணன், உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !