பூண்டி கோவிலில் இன்று பூமி பூஜை!
ADDED :3841 days ago
அவிநாசி : பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மே 29ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது; யாகசாலை அமைப்பதற்கான பூமி பூஜை, இன்று நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் முக்கியத்துவம் பெற்றது. மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழுள்ள இக்கோவிலில், 2001 ஜன., 29ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனால், மே 29ல், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதையொட்டி, கோவிலில் திருப்பணிகள் துவங்கியுள்ளன.
கோபுரங்கள், மதில்களுக்கு வண்ணம் பூசும் பணி விரைவில் துவங்க உள்ளது. கோவில் முன்பகுதியில் யாகசாலை அமைக்கப்பட உள்ளது; இதற்கான பூமி பூஜை, இன்று காலை 7:00 மணிக்கு நடக்கிறது.