உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 30 ஆண்டுகள் ஒலித்த கோயில் மணிக்கு ஓய்வு!

30 ஆண்டுகள் ஒலித்த கோயில் மணிக்கு ஓய்வு!

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 30 ஆண்டுகளாக ஒலித்த மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, புதிய மணி பொருத்தப்பட்டுள்ளது. கோயிலில் அதிகாலை நடை திறக்கப்படும் 5மணிக்கும், பூஜை நேரங்களிலும் கோயில் மணி ஒலிக்கப்படும். இந்த மணியின் ஓசை கேட்டு, திருப்பரங்குன்றம், பசுமலை, திருநகர் பகுதியிலுள்ள பக்தர்கள் வீடுகளில் சுவாமி கும்பிடுவர். சிலர் நேரத்தை கணக்கிட்டு வந்தனர். கோயில் துவங்கிய காலத்தில் இருந்தே, இந்த மணி ஓசை ஒலிக்கப்பட்டு வருகிறது. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மணிக்கூண்டில் இதற்காக வெங்கல மணி உள்ளது. முன்பு இருந்த மணி பழுதடைந்ததால், 1982-83ல் புதிய வெங்கல மணி பொருத்தப்பட்டது. முப்பது ஆண்டுகள் ஒலித்த மணியும் பழுதானதால், ஜூன் 6ல் நடந்த கும்பாபிஷேகத்தின்போது, 22 எடையில் கோயில் சார்பில் புதிய வெங்கல மணி பொருத்தப்பட்டு, முன்பிருந்த மணிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !