ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா!
ADDED :3843 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வடக்குநெமிலி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.வடக்குநெமிலி ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதை, லட்சுணர் சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. காலை 8:00 மணிக்கு மூன்றகால பூஜைகள் முடிந்து, கோபூஜை, விசேஷ திரவிய ஹோமம், மகா பூர்ணாஹதி, தீபாராதனை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை பொறியாளர் ராமலிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள், விழாக் குழுவினர்
செய்திருந்தனர்.