உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!

கன்னியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்!

கடம்பத்தூர் :கடம்பத்தூர் அருகே, கன்னியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம், இன்று
நடைபெறுகிறது.

கடம்பத்தூர் - விடையூர் சாலையில் உள்ள, கன்னியம்மன் நகரில் அமைந்துள்ளது, பரிபூர்ண
கன்னியம்மன் கோவில். இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் இன்று காலை
நடைபெறுகிறது.முன்னதாக, நேற்று காலை 8:00 மணிக்கு, மகா கணபதி ஹோமமும், நவக்கிரஹ ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. பின், மாலை 4:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று, காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து, மகா பூர்ணாஹூதியும், கலச புறப்பாடும் நடைபெறும். பின் காலை 8:15 மணிக்கு, மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !