உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை!

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை!

ஊத்துக்கோட்டை: வியாழக்கிழமையை முன்னிட்டு, தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ளது. நேற்று காலை, தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.தொடர்ந்து, சந்தன அலங்காரத்தில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு
பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !