உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவசுப்பிரமணியர் கோவிலில் தேர்திருவிழா!

சிவசுப்பிரமணியர் கோவிலில் தேர்திருவிழா!

வில்லியனுார்: வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கே உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியன் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 24ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து நடந்துவரும் விழாவில் 1ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. பொது உற்சவமாக தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை சிறப்பு அபி ேஷகமும், அதனை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் தேனீ ஜெயக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், கண்ணபிரான், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், நாளை மாலை ஊஞ்சல் உற்சவமும், 5ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் குருக்கள் பாலசுப்ரமணியன் ஆகி யோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !