உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில், சட்டம் ஒழுங்கு, ஐ.ஆர்.பி., சிறப்பு அதிரடிப்படை போன்ற
பிரிவுகளை சேர்ந்த 375 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருட்டு,
பிக்பாக்கெட், செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க, சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு
பணியில் ஈடுபடுகின்றனர்.மேலும், உயரமான கட்டடங்களில் இருந்து பைனாக்குலர் மூலமாக,
கூட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !