உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் தேர் திருவிழா!

கைலாசநாதர் கோவிலில் தேர் திருவிழா!

காரைக்கால்: கைலாசநாதர் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது. காரைக்காலில் உள்ள
கைலாசநாதர் கோவிலில், பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 21ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், தேர் திருவிழா நேற்று நடந்தது. கலெக்டர் வல்லவன், எஸ்.பி., பழனிவேல், வாரியத் தலைவர்கள் கோவிந்தராஜ், சுரேஷ், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். பாரதியார் சாலை, கென்னடியார் வீதி, மாதாக்கோவில் வீதி வழியாக தேர் நிலையை வந்தடைந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !