உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று பங்குனி உத்திர விழா!

சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று பங்குனி உத்திர விழா!

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர நட்சத்திரத்தையொட்டி, உற்சவர் பெருமாள் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று அருள்பாலிக்கிறார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று (3ம் தேதி) பங்குனி
உத்திரத்தையொட்டி, காலை 7:30 மணிக்கு மூலவர் பெருமாள், தாயாருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 5:30 மணிக்கு
திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் தாயாருடன் சிறப்பு சேர்த்தி உற்சவத்தில்
பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6:30 மணிக்கு கர்நாடக சங்கீத கச்சேரியும், சிதம்பரம் பரத்வாஜ் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், இரவு 8:30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !