உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாண உற்சவத் திருவிழா!

திருக்கல்யாண உற்சவத் திருவிழா!

உடுமலை : புதுப்பாளையம், வீரகாமாட்சி அம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவத் திருவிழா நடந்தது.

உடுமலை, பெதப்பம்பட்டி அருகே புதுப்பாளையத்தில் அமைந்துள்ளது, வீரகாமாட்சி அம்மன் கோவில். கோவிலில், திருக்கல்யாண உற்சவத்திருவிழா மார்ச், 17ம் தேதி கணபதி ஹோமம், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.தினமும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏப்., 1 காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மாவிளக்கு எடுத்தல், குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா, பொங்கல் வைத்தல், மகா அபிஷேகம் நடந்தன. நேற்று மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மாலை, 6:00 மணிக்கு அபிஷேக பூஜையுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !