உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்டியல் வசூல் ரூ.16 லட்சம்!

உண்டியல் வசூல் ரூ.16 லட்சம்!

இளையான்குடி: தாயமங்கலம் கோயில் உண்டியலில் ரூபாய் 16 லட்சம் காணிக்கையாக
செலுத்தப்பட்டிருந்தது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 29ல் துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அறநிலையத்துறை பரமக்குடி உதவி கமிஷனர் ரோஜாலிசுமதா, ஆய்வாளர் சோமசுந்தரம், பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூபாய் 16 லட்சத்து ஆயிரத்து429ம், தங்கம் 38 கிராம், வெள்ளி 105 கிராம் வசூலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !