திருப்புவனத்தில் பங்குனி தேரோட்டம்!
ADDED :3839 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்பாள் பங்குனி திருவிழா 9 ம் நாள் விழாவையொட்டி நேற்று காலை தேரோட்டம் நடந்தது. பெரிய தேரில் புஷ்பவனேஸ்வரர் பிரியாவிடை தாயாருடனும்,சிறிய தேரில் சவுந்தரநாயகி அம்பாளும் எழுந்தருளினர். காலை 9.45 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்கள் தேரை இழுக்க நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது.
காலை 11.30 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்த பின் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காய்கறிகள், பழங்களை சூறை விட்டனர். மானாமதுரை டி.எஸ்.பி., புருசோத்தமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.