ஸ்ரீவில்லிபுத்தூரில் கிரிவலம் நேரம் மாற்றம்!
ADDED :3839 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: சந்திரகிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை பெருமாள்
கோயிலில் கிரிவல நேரம் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக பவுர்ணமி தோறும்
மாலை நேரம் கிரிவலம் நடக்கும். கிரகணத்தை முன்னிட்டு நாளை (ஏப்.,4) காலை 10 மணிக்கு
பெருமாள், கருடாழ்வாருடன் கிரிவலம் வருகிறார். இதேபோல் ஆண்டாள் கோவிலில் மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு இரவு 7.35 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.இரவு 9 மணிக்கு முத்துக்குறி புறப்பாடு நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.