உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி திரவுபதி அம்மன் கோயில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி திரவுபதி அம்மன் கோயில் தேர் திருவிழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி திரவுபதி அம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி திரவுபதி அம்மன் கோயில் மகாபாரத தேர் திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு விராட பருவமும், அர்ச்சுனன் மாடு திருப்புதல், காளிகோட்டை இடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மாலை 5 மணிக்கு தீமிதி நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !