அரோகரா கோஷம் முழங்க.. சென்னிமலையில் பங்குனி உத்திர தேரோட்டம்!
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடந்தது. "முருகனுக்கு அரோகரா கோஷத்துடன், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சென்னிமலையில் மலை மீது பாலதாண்டாயுத மூர்த்தம் கொண்டு எழுந்தருளி இருக்கும், வள்ளி தெய்வானை சமதே சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேர்திருவிழா, ஆறு நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு பங்குனி உத்திர விழா, கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 2ம் தேதி இரவு திருக்கல்யாணம், நேற்று அதிகாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. பின், சுவாமி புறப்பாடும், சுவாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து, தேர்நிலையில் வைக்கப்பட்டு தலைமை குருக்கள் ராமநாதசிவம், சிறப்பு பூஜை செய்தார்.
காலை, 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., நடராஜ், எம்.பி., செல்வகுமார சின்னையன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை இழக்க, தேர் நிலையை விட்டு புறப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் "முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். கிழக்கு, தெற்கு, மேற்கு ரத வீதி வழியாக வலம் வந்து, வடக்கு வீதியில் தேர் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர் மீது, உப்பு, மிளகு தூவி வணங்கினர். மாலையில், தேர் நிலை சேர்ந்தது. கோ ஆப்டெக்ஸ் இயக்குனர் கோபாலகிருஷ்ண ன், யூனியன் தலைவர் கரு ப்புசாமி, துணை தலைவர் துரைசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சேமலையப்பன், சென்னிமலை டவு ன் பஞ்., தலைவர் சண்முகசுந்தரம், துணை தலைவர் தெய்வசிகாமணி, சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சுப்புசாமி, யெங் இந்தியா பள்ளி தாளாளர் லட்சுமணன், சிரகிரி டெக்ஸ் தலைவர் தம்பித்துரை, விசைத்தறி டெக்ஸ் யுவராஜ், மெட்றோ டெக்ஸ் தலைவர் கந்தசாமி, செம்மலர் டெக்ஸ் மேலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்று (5ம் தேதி) காலை பரிவேட்டையும், நசியனூர் நாட்டுக்கவுண்டர்கள் மடம் மண்டபக் கட்டளையும், பகலில் ஈங்கூர் கிராம நாட்டுக்கவுண்டர்கள் மடம் மண்டபக் கட்டளையும் நடக்கிறது. இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும், எழுமாத்தூர் பனங்காடான் குலம், செல்லங்குலம், கொங்கு வேளாளக்கவு ண்டர்கள் மடம் மண்டபக்கட்டளை நடக்கிறது. நாளை (5ம் தேதி) காலை, 8 மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சியும், இரவு, 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் சபர்மதி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ண், தலை மை எழுத்தர் ராஜீ, பாலசுப்பிரமணியம், கோவில் தமிழ் புலவர் அறிவு ஆகியோர் செய்திருந்தனர்.