உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருக்கல்யாண உற்சவம்

பொள்ளாச்சி: சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை, 8:30 மணிக்கு மகாதீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய பெருமான், வள்ளி ஸ்ரீ தேவசேனா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். பின், இரவு, 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சித்திரத்தேரில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

வால்பாறை: வால்பாறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவிலின், 63ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா, கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று மாலை, 4:00 மணிக்கு முருகன் நற்பணி மன்றத்தலைவர் மதனகோபால் தலைமையில் திருமண சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின் பல்வேறு அபி?ஷக பூஜைகள் செய்யப்பட்டன. மாலை, 5:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில், வால்பாறை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. இன்று, காலை, 8:00 மணிக்கு அண்ணாநகர் சின்னையன் குழுவினர் முருக பக்தர்கள் மற்றும் அண்ணாநகர் இளைஞர் குழுவினரின் சார்பில் நல்லகாத்து ஆற்றிலிருந்து, கோவிலுக்கு பக்தர்கள் சுத்துக்காவடி, அங்கு அலகு காவடி மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர். தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !