நெல்லி குளங்கரை பகவதி கோவில் திருவிழா
ADDED :3844 days ago
பாலக்காடு: புகழ்பெற்ற நென்மாறை வல்லங்கி திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நென்மாறையில் உள்ளது, நெல்லிகுளங்கரை பகவதி அம்மன் கோவில். இங்கு பங்குனி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் 5 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் துவங்கிய திருவிழாவில், 11 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, பகவதி அம்மனின் உருவச்சிலை அணிவகுப்பு நடந்தன. மாலை 4:30 மணிக்கு, செண்டை மேளம் (தாயம்பகை), 5 மணிக்கு வானவேடிக்கை, 10:30 மணிக்கு, நென்மாறை மற்றும் வல்லங்கி தேசங்களில், நின்றுள்ள யானைகளின், பவனி ஊர்வலம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.