மல்லாங்கிணரில் சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்
ADDED :3844 days ago
காரியாபட்டி:மல்லாங்கிணரில் செங்கமலநாச்சியார் சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்ட திருவிழா மார்ச் 26ல் கொடி@யற்றத்துடன் துவங்கியது. தினமும் கருடவாகனம், அன்னவாகனம், சிங்கவாகனம், கிளிவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சென்னகேசவ பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது. அலங்காரம் செய்யப்பட்ட @தரில் சென்னகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் நாகையா, கோயில் செயல் அலுவலர் நாராயினி, ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.