உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதலை வாய்ப்பிள்ளை உற்சவ பெருவிழா

முதலை வாய்ப்பிள்ளை உற்சவ பெருவிழா

அவிநாசி: அவிநாசி கோவில் தல வரலாற்றில் இடம் பெற்ற முதலை வாய்ப்பிள்ளை உற்சவ விழா, நேற்று நடைபெற்றது. முதலை விழுங்கிய சிறுவனை, சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் பாடி மீட்டுத்தந்த வரலாறு பெற்றது, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். அந்த வைபவம் நடந்த, பங்குனி உத்திர நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் முதலை வாய்ப்பிள்ளை உற்சவம் நடைபெறும். இந்தாண்டு விழா, நேற்று நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், கருணாம்பிகை அம்மனுடன், அவிநாசியப்பர் எழுந்தருள, சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவார பாடல்களை ஓதுவா மூர்த்திகள் இசைத்தனர். முதலை வாயிலிருந்து பாலகனை சிவாச்சாரியார் வெளியே எடுத்து, சிறப்பு பூஜை செய்தார். பக்தர்கள், "அவிநாசியப்பருக்கு அரோகரா என கோஷமிட்டனர். ரிஷப வாகனத்தில், அவிநாசியப்பர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !