பாலமுருகன் கோயிலில் வருடாந்திர சிறப்பு பூஜை!
ADDED :3838 days ago
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் வருடாந்திர சிறப்பு பூஜைகள், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. கோயில் மூலவர்கள் பாலமுருகன், ராஜ விநாயகர், ராஜ துர்க்கை அம்மன், ராஜ தட்சிணாமூர்த்தி, சுவர்ண ஆகர்ஷண கல்யாண பைரவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. மதுரை எம்.எல்.யு.சங்க தலைவர் சுரேந்திரன் தலைமை வகித்தார். திருச்சி பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர் நாகலட்சுமி முன்னிலை வகித்தனர். விழா குழு ராஜாராம், வேல்ராஜன், பாலசுப்பிரமணியன் ஏற்பாடுகள் செய்தனர்.