உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயமங்கலத்தில் இன்று தேரோட்டம்!

தாயமங்கலத்தில் இன்று தேரோட்டம்!

இளையான்குடி : தாயமங்கலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச்29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் சிம்மம் , காமதேனு, அன்னம் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று பொங்கல் திருவிழா சிறப்பாக நடந்தது. இன்று இரவு 7.15 மணிக்கு மின்சார அலங்காரத்துடன் கூடிய தேர்பவனி நடக்கிறது. நாளை காலை 7.40 மணிக்கு பால்குடமும், மாலை 5.40 மணிக்கு ஊஞ்சலும், இரவு 10.15 மணிக்கு புஷ்பபல்லக்கும் நடக்கிறது. ஏப்8ல் இரவு 8 மணிக்கு தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !