உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கத்தா மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

சக்கத்தா மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

கோத்தகிரி : கோத்தகிரி சக்கத்தா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நாளை காலை 7:30 மணிக்கு, அபிஷேக அலங்கார பூஜையை தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு, அம்மன் அழைத்தலும் நடக்கிறது. 7ம் தேதி காலை, 10: 30 மணிக்கு, அம்மன் ஊர்வலம் நடக்கிறது. முக்கியத் திருவிழா நாளான, 8ம் தேதி, காலை 9:00 மணிக்கு, திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 9ம் தேதி, அம்மன் சிங்கவாகன ஆரோகரமும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. 13ம் தேதி, மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !