வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி
ADDED :3841 days ago
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் நடந்த ஈஸ்டர் சிறப்பு ஆராதனையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:45 மணிக்கு, தேவாலய அதிபர் மைக்கேல் தலைமையில், 25 பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி துவங்கியது. நள்ளிரவு 12:00 மணிக்கு, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. நள்ளிரவு, 1:45 மணி வரை நடந்த சிறப்பு திருப்பலியில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். நேற்று மாலை, 6:30 மணிக்கு, திருத்தேர் பவனி தேவாலயத்தில் நடந்தது.