மலை அடிவார குளத்தில் தெப்பல் உற்சவம்!
ADDED :3843 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை முருகப்பெருமான் கோவில் மலை அடிவார குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டையில் சித்தகிரி முருகப்பெருமான் திருக்கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிற்பகலில் வழக்õடு மன்றமும், இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு வாண வேடிக்கையுடன் வள்ளி தேவசேனா முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மலை அடிவாரத்திலுள்ள குளத்தில் தெப்பல் உலா உற்சவம் நடந்தது. இதில் ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை, கீழ்பென்னாத்துõர் தொகுதி எம்.எல்.ஏ., அரங்கநாதன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி, விழாக்குழு தலைவர் அண்ணாமலை, ஊராட்சி தலைவர் கலாராஜவேலாயுதம், விழா குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.