உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானை வாகனத்தில் ஏகாம்பரநாதர் பவனி!

யானை வாகனத்தில் ஏகாம்பரநாதர் பவனி!

காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின், கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு, யானை வாகனத்தில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்   பவனி வந்தார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. தினமும் பல் ÷ வறு வாகனங்களில் உற்சவர் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, ராஜவீதிகளில் வலம் வந்தார்.  நேற்று முன்தினம் 13ம் நாள் மதியம், சர்வ தீர்த்தக்குளத்தில்   தீர்த்தவாரி நடந்தது. அன்று இரவு, யானை வாகனத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளி, ராஜவீதி வழியாக, மூங்கில் மண்டபம் வரை சென்று, நள்ளிரவு   1:30 மணியளவில், திருகோவிலை சென்றடைந்தார். பின், அதிகாலை 2:00 மணியளவில், கொடி இறக்கப்பட்டு, பங்குனி உத்திர திருவிழா   நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !