பொன்னானி மாரியம்மன் கோவில் திருவிழா!
பந்தலுார்: பந்தலுார் அருகே பொன்னானி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பொன்னானி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, 3ம்தேதி காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கோவில் தர்மகர்த்தா நாராயணன் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், இரவு, 9:00 மணிக்கு அம்மன் குடியழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 4ம்தேதி காலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு திருமஞ்சள் சாற்றுதலும், பொன்னானி நீர்த்தேக்கத்திலிருந்து பால்குடம், காவடி மற்றும் பறவைகாவடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் பூகுண்டம் மிதித்தலும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு பொன்னானி, நெல்லியாளம், உப்பட்டி, பு லியாடி, மானிக்குன்னு பகுதிகளுக்கு அம்மன் தேர் ஊர்வலம் நடந்தது. 5ம்தேதி காலை அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனைகள் மற்றும் சிறப்பு பூ ஜைகளும், நீர்வெட்டுதல், மாவிளக்கு பூஜையும் நடந்தது. மாலையில் அம்மன் கரகம் குடிவிடுதலுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தலைமையில் தலைவர் விஜயரத்னம், செயலாளர் கலைச்செல்வம், விழாக்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.