வீரட்டானேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி!
ADDED :3844 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசர் மன்றம் சார்பில் உழவாரப் பணி நடந்தது. பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சேலம் மாவட்டம் ஆத்துõர் திருநாவுக்கரசர் உழவார மன்றம் சார்பில் 200 பேர் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். இதில் குளம் துõர்வாருதல், வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நடராஜர் மண்டபம், அலங்கார மண்டபம், பூஜை பொருட்கள், தளவாட பொருட்களைத் துõய்மைப்படுத்தினர்.