சோழீஸ்வரர் கோவில் சீரமைப்பு விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED :3847 days ago
ஈரோடு : பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில் சீரமைப்பு பணிகளை, மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மக்கள் சேவை இயக்க அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார், கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியதாவது: பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவிலில், சுவாமி கல்யாண மண்டபம் இடிக்கப் பெற்று, கோவில் வெளிப்புறத்தில் மேற்கூரை வேயப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெறாத நிலையில், அன்னதானம், சுவாமி கல்யாணம் நடப்பது தடைபட்டுள்ளது. தரைத்தளம், சுற்றுச்சுவர், ஏனைய பணிகளை உடனடியாக செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கேட்டு கொண்டுள்ளார்.