உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா

மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் விழா

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோடு, காந்தி மைதானத்தில் மிகவும் பழமையான, மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். 88ம் ஆண்டு குண்டம் விழா, கடந்த மாதம் 24ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, பவானி ஆற்றில், பக்தர்கள் அலகு குத்தி, அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். தொடர்ந்து, 8:45 மணிக்கு தலைமை பூசாரி மோகன்குமார் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, பூப்பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டத்தில் இறங்கினார். அதைத்தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று, மாலை பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், பின்னர் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நாளை அம்மன் சுவாமி திருவீதி உலா, 10ம் தேதி காலை பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்தல், மதியம் அன்னதானம், மாலையில் மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகம், 13ம் தேதி மறுபூஜை நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !