உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் வெள்ளத்தில் 5 மணி நேரம் ஆடி அசைந்து வந்த குன்றத்து தேர்!

பக்தர்கள் வெள்ளத்தில் 5 மணி நேரம் ஆடி அசைந்து வந்த குன்றத்து தேர்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பங்குனி தேரோட்டத்தில் நேற்று 5 மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையை சுற்றி தேர் வலம் வந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமியும்,  தெய்வானையும் பெரிய வைரத்தேரில் எழுந்தருளினர். காலை  6.30 மணிக்கு புறப்பட்ட தேர், ஐந்து மணிநேரம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்து காலை  11.30 மணிக்கு நிலைக்கு வந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். உச்ச நிகழ்ச்சியாக இன்று தீர்த்த உற்சவம்  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !