இளையாத்தங்குடி மகோற்சவம் துவக்கம்
ADDED :3870 days ago
திருப்புத்தூர்: இளையாத்தங்குடி கைலாசநாத சுவாமி நித்யகல்யாணி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் மகோற்சவம் துவங்கியது. மார்ச் 29ல் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. ஏப்.,5 ல் முதல் திருநாளன்று உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியிலிருந்து, வெள்ளி சிம்ம வாகனத்தில் கீரணிப்பட்டிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாளுக்குக் காப்புக்கட்டி, திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து தினசரி இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.நாளை பால்குடம், ஏப்.,11ல் புஷ்ப பல்லக்கு, ஏப்.,13ல் தேரோட்டம், ஏப்.,14ல் அம்பாள் இளையாத்தங்குடி திரும்புதலும் நடைபெறும்.