ராக்காயிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3870 days ago
திருவாடானை; திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில் உள்ள ராக்காயிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதையொட்டி, தளிர்மருங்கூர் வணக்கம்மாள் மாரியம்மன் கோயில், பனிச்சகுடி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. காலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், இரவில் கலைநிகழ்ச்சியும் நடந்தன.