மயிலம் பகுதி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
ADDED :3870 days ago
மயிலம் : மயிலம் பகுதி விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. மயிலம், கொல்லியங்குணம், கூட்டேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. கொல்லியங்குணத்திலுள்ள சுந்தரவிநாயகர் கோவிலில் நேற்று மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாரதனை நடந்தது.இது போல் மயிலம் அக்னி குளக்கரையில் உள்ள வினாயகர் கோவில், செண்டூர் விநாயகர், கூட்டேரிப்பட்டு செல்வவிநாயகர், தென்பசியார் சந்திரசேகர பிள்ளையார் ஆகிய கோவில்களில் சங்கடஹர சதூர்த்தி வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.