உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் தெப்பல் உற்சவத்தில் ராமர் வீதியுலா!

திருக்கோவிலூர் தெப்பல் உற்சவத்தில் ராமர் வீதியுலா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக, நேற்று முன்தினம் சுவாமி வீதியுலா நடந்தது.  திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக, நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சீதா லஷ்மண அனுமந் சமேத ஸ்ரீராம பிரான் சிறப்பு அலங்காரத்தில், ஆஸ்தானத்தில் எழுந்தருளினார். சுவாமி ஊர்வலமாக தெ ப்பக்குளத்தை அடைந்தது. குளம் சீரமைப்பு பணி நடப்பதுடன் தண்ணீர் இன்றி வற்றியுள்ளது. இதனையடுத்து குளக்கரையில் அமைக்கப்பட்ட தெப் பத்தில் சுவாமி எழுந்தருளியதும், பூஜைகள் நடந்தது. சுவாமி குளத்தை சுற்றி கோவிலை அடைந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள்  தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !